உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொழும்பில் குண்டு வெடிப்புக்கள், தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றவேளை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்
நேற்றய தினம் கொழும்பில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புக்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றவேளை யாழ்.மாவட்டத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விசேட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை இன்றைய தினம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் விசேட அதிரடிப்படையினர் புகுந்து மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்கவும்,

பேருந்துகளில் அதிகளவான பயணிகள் ஏற்றுவதை தடுப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதிகள் கொண்டு செல்பவா்கள் தொடர்பில் சோதனைகளும் இடம்பெற்று வருகிறன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்