தமிழில் எழுத
பிரிவுகள்


நாட்டில் இடம்பெற்ற பயங்கர குண்டுத்தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 9 பேரும் சமத்துவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற்ற தேடுதலின்போதே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்தவர்கள் மற்றும் பொதிகளை தம்வசம் வைத்திருந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இக்கொடூர தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்படி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்பபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்