உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தோருக்கு, சென்னையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சில பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவங்களில், 359 பேர் உயிரிழந்த நிலையில் 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இதுகுறித்து அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த சம்பவம் போன்று இனி எங்கும் நடக்கக்கூடாது. அதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதில் கலந்துகொண்ட கலிபோர்னியாவின் சான்பிரன்சிஸ்கோவைச் சேர்ந்த மோனா என்ற பெண் கூறுகையில், “என்னுடைய 11ஆவது வயதில் அமெரிக்காவில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை பார்த்துள்ளேன். அந்த சம்பவம் இன்றும் என் மனதில் இருக்கிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கொடூரமானது. உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்