உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அது தொடர்பாக முக்கிய கூட்டமொன்று கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.கிளிநொச்சியிலுள்ள 104 பாடசாலைகளில் 32,800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்நிலையில், பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அவசர நிலைமையின்போது செயற்பட வேண்டிய விதம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் திகதி நாடெங்கிலுமுள்ள பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்வரும் 29ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்