உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28ஆம் திகதி வரை மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்தவகையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என்றும், வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட நடவடிக்கைகளில் இதுவரை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 78 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்