Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமராட்சி கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 28,35 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடமையில் இருந்து 74 கிலோ கஞ்சாவினை மீட்டதாக கடற்படையினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் கைது செய்த நபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபர்கள் மாவட்ட போதைப் பொருள் குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்