Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவோமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டு பாதுகாப்பு படையினரும் தற்போது இங்கு தங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் சேவையும் மிகவும் அவசியமாக உள்ளது.

இதேவேளை பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளமையினால், சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைவடைந்துள்ளது.
ஆகையால் சுற்றுலாத்துறையும் மீளமைக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது” என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்