Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மியான்மரில் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத்தில், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானம், மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அந்த விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர்.

அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்துஇ உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார்.

இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்