உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்துச் வர முயற்பட்ட நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையும் மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் 55 வயதான குறித்த நோர்வே நாட்டவர் அந்நாட்டில் நகை கடை வியாபாரி என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (06) இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த HQ 468 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 1 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 1 கிலோ 825 கிராம் எடையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட நகைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவருக்கும் 6 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்