Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று மாலை குடும்பத் தகராறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை கைக்குண்டுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தை மகனுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை எடுத்துச் சென்று வெடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெயகாந்தன் திடீரென்று அங்கு பிரசன்னமாகி குறித்த நபருடன் லாவகமாக பேசி தடுத்து நிறுத்தியுள்ளார்.

 

இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச்சங்கமும் உடனடியாக மடு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று அதிகாலை பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட பாலம்பிட்டி 317ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55வயதுடைய பெரியபண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்