உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மேற்கு உகாண்டாவில் படகு மூழ்கியதில் இதுவரை 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பலர் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு உகாண்டா மாவட்டத்தின் ஹோய்மா பகுதியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்ட காற்பந்து வீரர்களையும் ரசிகர்களையும் ஏற்றிச்சென்ற படகே நேற்று (ஞாயிறுக்கிழமை) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.விபத்து இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள் அங்கிருந்த பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் 32 பேர் மீட்கப்பட்டனர் என அந்நாட்டு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

மேலும் இந்த படகில் சென்றவர்கள் உயிர்காக்கும் அங்கிகளை அணியவில்லை எனவும், தொடர்ட்ந்தும் மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில், உகாண்டா மற்றும் காங்கோ எல்லையோடு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கால்பந்து அணியின் 30 உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்