உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.விசா புதுப்பித்தலுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்தபோதே குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாத் மொஹமட் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசேட பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா விசாவில் அந்நாட்டுக்குச் சென்ற குறித்த நபர் கடந்த 1 வருடம் 2 மாதங்களுக்கு மேலாக அங்கு தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்