உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலையில் மாணவர்கள் 21 பேர் திடீர் சுகவீனம் காரணமாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (24) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் -7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் 21 பேரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இம்மாணவர்களின் கை மற்றும் முதுகுப் பகுதிகளில் அரிப்பு மற்றும் கொப்பழங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இக்கல்லூரியில் தௌ்ளுப்பூச்சிகள் மாணவர்களை தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும்,அங்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை என குறித்த கல்லூரிஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் கொண்ட போதிலும் அவ்வாறானதொரு நிலைமையும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்