உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு தெற்கு ஆழ் கடற் பரப்பில் 715 கடல் மைல் தொலைவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 35 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக கடற்படை கூறியுள்ளது.18 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட வயதினரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வைத்திய பரிசோதனையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்