உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவதாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனை கூட்டத்தில் ஈ பி டி பி செயலாளர் நாயகமும் எம் பியுமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியதையடுத்து உடனடியாக அதனை கவனிக்குமாறு இராணுவத்தளபதியை ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஜனாதிபதி ,பிரதமர் ,சபாநாயகர் , எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கிய டக்ளஸ் எம் பி , தேவையற்ற கெடுபிடிகள் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணும் நிலைமை இருப்பதாக சுட்டிக்காட்டினார்
“ குடு மற்றும் கடு தான் இப்போது குடாநாட்டின் பிரச்சினை ( குடு போதைப்பொருள் , கடு வாள் )
அங்கு தேவையற்ற கெடுபிடிகளை செய்யாதீர்கள்”என்று டக்ளஸ் எம் பி கூறியதையடுத்து அது குறித்து கவனிக்குமாறு உடனடியாக இராணுவத் தளபதியை பணித்தார் ஜனாதிபதி.

இந்த கூட்டம் முடிந்த கையோடு இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல் யாழ்ப்பாண கட்டளைத் தளபதிக்கு சென்றது. இதனையடுத்து டக்ளஸ் எம் பியை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட யாழ் கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி , குடாநாட்டில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையினர் மக்கள் பாதிக்காத வகையில் செயற்படுவதாகவும் ஆனாலும் ஏதும் அனாவசிய செயற்பாடுகள் நடைபெறுமாயின் தமது கவனத்திற்கு கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்