தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


சீனா , கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் மாயமாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் படகுகளில் விரைந்து சென்றனர். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்