உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25) காலை கைதுசெய்துள்ள கடற்படையினர், அவர்களிடமிருந்து கேரள கஞ்சாவையும், படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு அப்பாலான குறித்த கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இச்சந்தேக நபர்களை கைதுசெய்ததாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

டிங்கி படகொன்றில் கேரள கஞ்சாவை இலங்கைக்கு இச்சந்தேக நபர்கள் கடத்த முற்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகுடன் இரு சந்தேக நபர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்