உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் மகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குருநாகலை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் முஹம்மட் சாபி (42) எனும் வைத்தியரே நேற்றிரவு (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரது சொத்து விபரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கைதுசெய்யப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.இதேவேளை, குறித்த வைத்தியர் மகப்பேறு தொடர்பான 8,000 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என, குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக, சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்