உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


போலி பேஸ்புக் கணக்குகள் 2.2 பில்லியனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்குகளாக 2.38 பில்லியன் கணக்குகளே காணப்படுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் 2017ஆம் ஆண்டு ​தொடக்கம் இன்று ​வரை போலி பேஸ்புக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுமார் 694 மில்லியன்களாகக் காணப்பட்ட போலி கணக்குகள் கடந்த வருடம் 1.2 பில்லியன் வரை அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்