உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ், கச்சேரி பகுதியிலுள்ள பெந்தகோஸ்த் ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.கொழும்பை நோக்கி ஏ9 பிரதான வீதியூடாக பயணித்த வானொன்று எதிரே வந்த இளநீர் ஏற்றிவந்த வாகனத்துக்கு இடம்கொடுக்க முற்பட்டபோது அருகில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்