Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்தை எதிர்த்து சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி கோரலையும் விடுத்துள்ளது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தை வியாபாரிகள் நாளை (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இவ்வாறு சந்தை குத்தகைக்கு விடப்படுமானால், வியாபாரிகள் மாத்திரமின்றி நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். எனவே தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை நகர சபை கைவிட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபடவுள்ள வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வியாபரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் வாகனங்களை பாதுகாக்கும் விதமாக வாகன பாதுகாப்பு தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும். உழவர் சந்தையை மாற்றியமைக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை நகர்பகுதி வர்த்தகர்களின் ஆதரவினையும் குறித்த சந்தை வியாபாரிகள்கோரியுள்ளனர்.
சாவகச்சேரிச் சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க வேண்டுமென கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சபையில் உறுப்பினர்கள் கோரி வந்துள்ளனர். அவ்விடயத்தை தவிசாளர் கவனத்தில் கொள்ளவில்லை.

இருப்பினும் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக வலியுத்தியமையால், சந்தையை குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி தொடக்கம் சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கேள்வி கோரலுக்கும் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்