உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் – டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கிண்ண முதல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்