உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஹங்கேரியின் டென்யூப் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், 19 பேர் காணாமல் போயுள்ளனர்.தென்கொரிய சுற்றுலாப்பயணிகள் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில் காணாமல் போயுள்ள சுற்றுலாப்பயணிகளை மீட்பதற்குரிய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்துக்குள்ளான படகில் 33 பேர் பயணித்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்