உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்திக்கொண்டுள்ளது.எனினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகுந்த கவனமாக இருக்குமாறு இலங்கைக்கு வரும் தனது பிரஜைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் இப்போது பாதுகாப்பு நிலை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.எனினும் அவசரகால நிலை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் இத்தாலி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை ஆரம்பிக்கு முன்னர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தை 0094777488688 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்