உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக வேண்டுமென நாடளாவிய ரீதியில் போராட்டம் வலுவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் விசேட கலந்துரையாடலில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.இந்நிலையில் குறித்த கலந்துரையாடலின் பின்னர் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று நடைபெறவுள்ள ஊடகச் சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் கூறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்