உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இத்தாலியின் மிதக்கும் நகரான வெனிஸில் நங்கூரமிடவிருந்த மாபெரும் சொகுசுக் கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக அணை கரையில் மோதியுள்ளது.13 மாடிகளைக் கொண்ட குறித்த கப்பல் கரையில் மோதியதுடன், ஏற்கனவே அங்கு தரித்து நின்ற பிறிதொரு சிறிய கப்பல் மீதும் மோதியுள்ளது.

இதன்காரணமாக அந்த கப்பல் சேதமடைந்தது மாத்திரமன்றி, அதில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடும் காட்சிகளும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சிறிய கப்பலில் இருந்து நால்வர் மாத்திரம் காயமடைந்தனர்.

கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே, அதை உரிய இடத்தில் தரிக்க முடியாமற் போனதாகக் கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.2,500 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய MSC Opera எனப்படும் அந்த சொகுசுக் கப்பல் 2011ஆம் ஆண்டிலும் இயந்திரக் கோளாற்றால் பாதிக்கப்பட்டது.

வெனிஸ் நகரத்தின் கரைகளுக்கு மிக அருகே சொகுசுக் கப்பல்களை கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்பட்டுவரும் தருணத்தில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கப்பல்கள் நங்கூரமிடும் போது ஏற்படும் அலைகள் மிதக்கும் நகரத்தின் கட்டட அடித்தளத்தை அரிக்கச் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில். கப்பல்களை வேறு இடத்தில் நங்கூரமிடுவதற்கான வழிகளை வெனிஸ் துறைமுக ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்