உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்
மதியம் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமானத்தை தேடும் பணியை தொடங்கினர்.

சுகோய்-30 மற்றும் சி130 சிறப்பு விமானம் ஆகியவற்றில் சென்று தேடும் பணி நடைபெறுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்