உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ரிஷாட்டைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி தேரர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாத்தறையிலுள்ள விகாரை ஒன்றிலேயே தேரர்கள் சிலர் இன்று(செவ்வாய்கிழமை) காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள ரிஷாட்டிற்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். அவரைக் கைதுசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரிஷாட்டிற்கும் ஈஸ்ரர் தினத்தில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேரர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அங்கு அதிகளவான பொதுமக்கள் கூடியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்