உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


 

சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து சூட்சுமமான முறையில் வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நடத்திள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (05) காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

கடல்வழியாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பின்னர் சுண்டிக்குளம் கடற்கரையில் இறக்கப்பட்டு சாளை ஊடாக வாகனத்தில் கடத்தப்பட்ட போதே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தேடுதல் பணிக்காக பொலிஸ் குற்றத் தடகவியல் பொலிஸாரின் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்