உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.இதன்போது சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்

மேலும் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கில் மேலோங்கியுள்ள பிரச்சினைகளைத் தான் புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்