உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லிபியாவில் உள்ள குடியேற்றவாசிகள் தங்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு காவல் நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் திரிபொலிக்கு கிழக்காக உள்ள தஜோரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையத்தின் மீதே நேற்று (செவ்வாய் கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ள பகுதியில் சுமார் 120 குடியேற்றவாசிகள் தங்கியிருந்த நிலையில் சுமார் 80 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் லிபிய தேசிய இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிபிய பிரதமர் பயாஷ் அல் ஷேய்ரா குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தன்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பு காவல் நிலையத்தில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் பெரும்பாலானோர் தங்கியிருந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகளினால் லிபியா ஓர் இடைத்தங்கல் மையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதேவேளை, 2011 ஆண்டு லிபியாவில் கடாபி அரசாங்கம் வீழ்த்தப்பட்டதை அடுத்து உருவாக்கப்பட்ட லிபிய தேசிய இராணுவத்தை, 2015 ஆண்டு சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட லிபிய தேசிய உடன்பாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறித்த சர்வதேச ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக லிபிய தேசிய அரசாங்கம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்