Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சுறுலாப் பயணத்திற்கு ஏற்ற இடமாக, சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய அழகிய நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது.சுற்றுலா வழிகாட்டியான ‘லோன்லி பிளனெட்’ இணையத்தள நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
‘ஏன் நான் இன்னும் இலங்கையின் மீது நம்பிக்கையை இழக்கவில்லை, ஏன் நீங்களும் அதனை இழக்கக்கூடாது?’ என்ற தலைப்பில் ‘லோன்லி பிளனெட்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாப் பயணத்துறையை பொறுத்தவரையில் மிகவும் பிரசித்தி பெற்றதொரு நாடாகும். எனினும் அந்த அழகிய நாடு கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் லோன்லி பிளனெட், இலங்கைக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமகாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் தாக்குதல்களின் பின்னர் அங்கு விஜயம் செய்வதற்கான இணையத்தளம் மூலமான முன்பதிவுகள் சராசரியாக 186 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக சுற்றுலா பயணத்துறை போக்குவரத்து ஆலோசனை வழங்கல் நிறுவனமொன்று தெரிவித்திருப்பதாகவும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கைக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அச்சப்படுவதையும், அவர்களின் தயக்கத்தையும் எம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. அதேவேளை, அண்மைய வாரங்களில் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை தொடர்பாக விடுத்திருந்த தமது பயண எச்சரிக்கைகளைத் தளர்த்தியிருக்கின்றன.

இலங்கையில் ஒரு சிக்கலான நிலை காணப்படுகின்ற போதிலும் கூட, சுற்றுலாப் பயணத்துறைக்கு ஏற்றதொரு நாடாகவே அது தற்போதும் உள்ளது.இவ்வாண்டில் விஜயம் செய்யத்தக்க சுற்றுலாத்துறைக்குப் பெயர்போன எமது நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணியில் இருக்கிறது என லோன்லி பிளனெட் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்