உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பொல்கஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்த பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பணத்தை கொள்ளையிடுவதற்காக இன்று (11) நள்ளிரவு 12.15 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவராலேயே, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஊழியர், பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் அரணாயக்க பகுதியை சேர்ந்த 27 வயதுடையர் என்பதுடன்,
சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்