உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முல்லைத்தீவில் வைத்து வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரை முல்லைத்தீவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை தேடிவருவதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்தனர்.மனைவி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியாவை சேர்ந்த 42 அகவையுடைய ச.நாகேந்திரன் என்ற குடும்பஸ்தர் முல்லைத்தீவில் வைத்து பணம்பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பில் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடு பதியப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முல்லைத்தீவு மாவட்ட ஏ.எஸ்.பி கேமந்த குணசேகரவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.சேனநாயக்கவின் நெறிப்படுத்தலில் முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜ.பி.கங்காநாத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான பிரதீபன்(88873),ஸ்ரீலவர்த்தன(52694),ரத்நாயக்க (75224),சுரோன்றாஜ்(90943) உள்ளிட்ட குழுவினர் விசாரணைநடத்தி தேடுதல் மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்துள்ளார்கள்.

இது தொடர்பில் தெரியவருகையில் கடந்த 01.08.19 அன்று வவுனியாவை சேர்ந்த குறித்த குடும்பஸ்தரை முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கம் புதைத்துவைக்கப்பட்டுள்ளது அதனை தோண்டி எடுக்க வருமாறு அழைத்து சிறியரக வாகனம் ஒன்றில் கடத்தி முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடு ஒன்றில் அடைத்துவைத்து பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரிபகுதியில் வீடு ஒன்றில் அடைத்துவைத்து கடத்தப்பட்டவரின் மனைவிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி 01.08.19 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பிரான்சில் வசித்துவரும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை
சேர்ந்த சுந்தரலிங்கம் சிவறஞ்சிதன் என்பவரின் தலைமையிலான ஏழுபேர் கொண்ட குழு இந்த ஆட்கடத்தல் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்தவர்கள்,மன்னார்,வவுனியாவை சேர்ந்தவர்களே இவ்வாறான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து
03.08.19 அன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி சென்ற முல்லைத்தீவு பெருங்குற்றப்பிரிவு பொலிசார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைதுசெய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். இதன்போது அவர்களை கடந்த 08.08.19 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்துள்ளார்.

கடந்த 08.08.19 அன்று இந்த வழக்கின் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 20.08.19 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை தேடிவருவதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்