உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ். பொன்னாலை – காரைநகர் வீதியில் பயணித்த டிப்பர் வாகனமொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.இன்று (11) இடம்பெற்றுள்ள இவ்விபத்தின்போது, குறித்த வாகனத்தின் சாரதி காயங்களுடன் தப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், பொன்னாலை – காரைநகர் பாலத்தில் தடம்புரண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது.

மேலும், இவ்விபத்தினால் பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்