உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணம் மைலிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் கையளித்தார்.மைலிட்டி மற்றும் கரவெட்டி பிரதேசங்களில் மொத்தம் 220 வீடுகள் இன்று (வியாழக்கிழமை) பயனாளிகளின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.
செங்கல் மற்றும் கொங்றீட்டினாலான 10,000 கல் வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றில் ஏற்கனவே 4,750 வீடுகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன. தற்போது அமைக்கப்படும் 2,565 வீடுகளுக்கு 2,565 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2,565 வீடுகளில் 1,500 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே மைலிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 200 வீடுகளும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 20 வீடுகளுமாக மொத்தம் 220 வீடுகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் பின்னர் திருநெல்வேலிக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைத்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்