Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
5.4 ரிக்டர் அளவில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் டோஹோகு பகுதியிலுள்ள ஆமோரி நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.ஜப்பானில் கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் மாத்திரம் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் 55 முறையும், கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இதேவேளை, அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்