உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உண்மையான தமிழன் ஒருவன் ஒருபோதும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க மாட்டார் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி  விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இரண்டு மூன்று வழக்குகள் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எதற்காக அவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தார் என்பது தொடர்பில் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் தமிழ் மக்களுக்கு இருண்ட யுகம் ஒன்று உருவாகும் என்பது நிச்சயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அவர் இது சிங்கள நாடு என்ற எண்ணத்தில் இருப்பவர் எனவும் அதனை உறுதி செய்வதற்காக எந்தவொரு வன்முறை செயல்களிலும் ஈடுபடக்கூடியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குமாறு தான் எந்த இடத்திலும் கூறவில்லை எனவும் அவருக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்பதே தனது கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்