Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தோனேசியாவின் சுலாவ்சி மாகாணத்தின் கெண்டாரி துறைமுகத்தில் இருந்து மரொவலி மாவட்டத்திலுள்ள கலேராங் துறைமுகம் நோக்கி பயணித்த கப்பலிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில் விபத்து குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிகாரிகள், ‘கப்பலின் இயந்திர அறையில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதால் ஊழியர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கப்பலில் இருந்த 61 பேரை அருகில் வந்த கப்பலில் உள்ளவர்கள் மீட்டனர்’ என தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்