Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கிரீன்லாந்தை விலைக்கு வாங்க எண்ணிய ட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது.டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்து பனித்தீவை வாங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் டென்மார்க் செல்லவுள்ளார். இந்நிலையிலேயே அவர் கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தளம் ஒன்று கிரீன்லாந்து தீவில் ஏற்கனவே செயற்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய ரேடார் மையமாக இருக்கும் இந்த தளத்தில் 600 வீரர்கள் உள்ளனர்.

எனினும், ட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது. கிரீன்லாந்து தீவை விற்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. விற்பனை செய்வதாக இருந்தால் வெளிப்படையாக தெரிவிப்போம் என கிரீன்லாந்து தீவின் வெளியுறவு அமைச்சர் ஆனி லோன பேக்கர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து தீவு விற்பனை செய்யப்படுவதாக கூறுவது ஏப்ரல் தின முட்டாள் ஜோக் என டென்மார்க் முன்னாள் பிரதமர் லார்ஸ் லோக்கி ராஸ்முஸ்சென் கூறியுள்ளார்.

இந்த தீவை விலைக்கு வாங்க விரும்புவதன் மூலம் கிரீன்லாந்து தீவில் வாழும் 50 ஆயிரம் குடிமக்களை டென்மார்க் தன்னிடம் விற்று விடும் என அமெரிகா நினைப்பது முற்றிலும் கொடூரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1946 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முற்பட்டார். எனினும் அவரது முயற்சி தோல்வியிலேயே நிறைவடைந்தது.

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8,11,000 சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்