Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கென்யாவில் இருந்து கொங்கோ நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரேங்கர் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளான நிலையில் ஏற்பட்ட தீயினால் 20 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரேங்கர் பாரவூர்தி உகண்டாவின் மேற்கு பகுதியில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பயணித்துக் கொண்டிருந்த போதே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியில் சென்று கொண்டிருந்த பிறிதொரு சரக்கு வாகனம் மீது மோதியுள்ளது.

வாகனங்கள் மோதிய வேகத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி வெடித்துச் சிதறியதுடன், தீப்பிடித்தது.இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. அத்துடன், வீதியின் மருங்குகளில் இருந்த வர்த்தக நிலையங்கள், சிறிய கடைகள் உட்பட பல கட்டிடங்கள் தீக்கிரையாகின.

இந்த விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் உகண்டா பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அண்மையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0
Shares

Facebook

Twitter

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்