Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மதியம் தனது 66ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அருண் ஜெட்லி (Arun Jaitley) டிசம்பர் 28, 1952 இல் பிறந்தார், இவர் இந்திய பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

தவிர பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார்.

பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது பள்ளிக்கல்வியை டில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.

பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை டில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.தனது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள்

பெற்றுள்ளார். 1974இல் டில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.
ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்