Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.வவுனியா பொலிஸாருக்கு இன்று (புதன்கிழமை) காலை இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இந்த தேடுதலின்போது, வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளையதினம் ஆளுநரது பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்