Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ். காங்கேசந்துறை பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.காங்கேசந்துறை கடற்கரைப் பகுதியில் நேற்று (10) கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,கைவிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை கண்டுபிடித்துள்ளனர். அப்பொதியினுள் 11 சிறிய பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 23.1 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தமை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமது ரோந்து நடவடிக்கையை தொடர்ந்து இக்கேரள கஞ்சாவை கைவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைகளுக்காக, யாழ். போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்