உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஏழு பேர் உயிரிழந்தனர்.நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரின் விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் சிறிய ரக விமானமொன்று லொப்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப பிரச்சினை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது வீழ்ந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விமானம் விழுந்த வீட்டில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்,

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்