உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கைத்தடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.மறவன்புலவு மக்களால் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறவன்புலவில் மக்கள் குடியிருப்பு பகுதியை அண்மித்த இடங்களில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.முதலமைச்சர் அலுவலகத்தில் வட மாகாண ஆளுநர் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டு வரும் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து போராட்ட நடைபெறும் இடத்திற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் ஆகியோரை உடனடியாக குறித்த இடத்திற்கு வருமாறு பணிப்புரை வழங்கப்பட்டு, போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் ஐவரையும் இணைத்து சந்திப்பொன்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்