தமிழில் எழுத
பிரிவுகள்


கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினரால் நிரந்தர நியமனம் கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தின்போது உள்வாங்கப்படாத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 245இற்கும் அதிகமான பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதாவது 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 2004 தொடக்கம் 2007 டிசம்பர் மாதம் வரை சேவையாற்றியவர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விடயம் தொடர்பாக பரிசீலனை செய்து நிரந்தர நியமனம் வழங்க கோரி, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக கல்வி அமைச்சுக்கு மகஜர் வழங்கியபோதும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விசனம் வெளியிட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்