தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழகம் மட்டுமல்லாது எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தேசிய மொழியாக ஹிந்தியை அறிவிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இதற்கு தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஹிந்தி திணிப்பு குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும்போதே ரஜினி இவ்வாறு தெரிவித்தார்.இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஹிந்தியை திணிக்கக் கூடாது. தமிழகம் மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழியாக இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி கொண்டு வரமுடியாது.

எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தியை திணித்தால், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடக்கு மாநிலத்தில்கூட சில மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்