உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஐஸ் போதைப்பொருளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துவந்த, இந்தியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து குறித்த நபர் வெளியேறும்போது, அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கப் பிரிவினர், அவரது பயணப் பொதியை சோதனையிட்டபோதே, 864.215 கிராம் நிறையுடைய, ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில், கட்டுநாயக்க விமான நிலைய மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய, பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்