உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள MOZI 2 ஆளில்லா விமானத்தின் பரிசோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமானம் முழுமையாக சூரிய சக்தியில் இயங்கக்கூடியது என்பது இதன் சிறப்பம்சம் எனக் கூறப்படுகின்றது.ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம், இந்த ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளது. இதன் பரிசோதனை ஓட்டமானது, கிழக்கு சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள டெக்கிங் பகுதியில் அமைந்துள்ள மோகன்ஷான் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த பரிசோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா விமானம் 15 மீட்டர் நீள இறக்கையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விமானம் அதிகபட்சமாக 8,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடியது.

எட்டு மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்த பின்னர், இரவு நேரங்களில் 12 மணி நேரம் வரை குறைந்த வேகத்தில் பயணம் செய்யக் கூடியது.
இந்த ஆனில்லா விமானமானது பேரழிவு காலங்களில் நிவாரணப் பணிகள், உளவு மற்றும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்